பசுவதைக்கு தடை கோரி மனுவை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
1 min read
Supreme Court refuses to urgently hear petition seeking ban on cow slaughter
27.5.2026
அகில பாரத இந்து மகாசபா முன்னாள் துணைத்தலைவர் சதீஷ்குமார் அகர்வால் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.அதில், “பசுக்களையும், கன்றுகளையும் பாதுகாக்க பசுவதைக்கு எதிரான சட்டங்களை உறுதியாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மனுதாரரின் வக்கீல் வருண்குமார் சின்ஹா ஆஜரானார். “28-ந் தேதி பக்ரீத் பண் டிகை என்பதால், 27-ந் தேதியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். நீதிபதிகளோ, “ஒரு நாள் முன்பும் இதை நினைவுபடுத்தினீர்கள். எந்த அவசரமும் இல்லை. நன்றி” என்று கூறி, அவசரமாக விசாரிக்க மறுத்து விட்டனர்.