இயக்குநர் பாரதிராஜாவின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி கடிதம்
1 min read
Prime Minister Modi writes to Director Bharathiraja’s family
13.6.2026
இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா கடந்த 10-ஆம் தேதி வயோதிகம் மற்றும உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
நீலாங்கரையில் வைக்கப்பட்டிருந்த பாரதிராஜாவி்ன் உடலுக்கு முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவரகளும், திரைப் பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பாரதிராஜாவின் மறைவுக்கு பலரும் தங்களின் சமூக வலைத்தளம் வாயிலாக இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், பாரதிராஜா மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார்.
இந்நிலையில் பாரதிராஜாவின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில், “கிராமப்புற வாழக்கையை தத்ரூபமாக திரையில் சித்தரித்தது பாரதிராஜாவின் சிறப்பான அம்சமாகத் திகழ்ந்தது. கலைக்கான பாரதிராஜாவின் பங்கு என்றும் நினைவுகூரப்படும். பாரதிராஜாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் மனவலிமையை தர பிராத்திக்கிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார்.