கடையம் அருகே மிளா வேட்டையாடியவர் கைது
1 min read
Man arrested for hunting sambar deer near Kadayam
16/8/2026
கடையம் அருகே சிவசைலம் வனப் பகுதியில் மிளா வேட்டையாடிய குற்றவாளி அதை தனது வாட்ஸ்அப் செயலியில் வைத்த ஸ்டேட்டஸால் சிக்கி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்தில் சிவசைலம் பிரிவில் உள்ள முள்ளிமலை பொத்தை பகுதியில் மிளா (கடமான்) ஒன்றை வேட்டையாடியதை தனது வாட்ஸ்அப் செயலியில் ஸ்டேட்டஸாக பதிவிட்டுள்ளார். பிரபலமாக எண்ணி வாட்சப் ஸ்டேட்டஸாக வைத்த குற்றவாளி தற்போது கம்பி எண்ணி வருகிறார்.
இதுதொடர்பாக, தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் தாலுகா வீராணத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 26) என்பவர் உயிரின வனக்குற்ற வழக்கு எண் WLOR No. 03/2026-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
துணை இயக்குநர் அன்பு (கூ.பொ.) உத்தரவின்படி, கடையம் வனச்சரகர் ஜெயப்பிரகாஷ் கைது செய்யப்பட்ட சுரேஷை தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.
மேலும், மிளா (கடமான்) வேட்டையாடிய வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷின் கூட்டாளிகள் மூன்று பேர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் முயற்சியில் கடையம் வனச்சரகர் ஜெயபிரகாஷ் ஈடுபட்டுள்ளார்.
செய்தியாளர் மா. ஜோசப்…