August 15, 2026

Seithi Saral

Tamil News Channel

மணிமுத்தாறு அருவியில் 12 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி

1 min read

Permission granted to bathe at Manimutharu Falls after 12 days.

16.6.2026
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் கடந்த ஜூன் 4ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழையால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து, நீரின் வேகம் அதிகமாக காணப்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 12 நாட்களாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று அருவியில் நீர்வரத்து குறைந்து இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

12 நாட்களுக்கு பிறகு மீண்டும் குளிக்க அனுமதி கிடைத்ததால் மணிமுத்தாறு அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *