திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு
1 min read
Election petition filed against Chief Minister Vijay’s victory in the Trichy East constituency.
16.6.2026
திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றுள்ளார். எனவே அவரது வெற்றியை செல்லாது என்று அறிவித்து தம்மை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்று திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிட்டார். இரண்டிலும் வென்றார். அதில் திருச்சி கிழக்கு தொகுதியை முறைப்படி ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்தின் முதல்வராக சட்டப்படி பதவியேற்றார்.
இந் நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக தவெக தலைவர் விஜய் வென்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மனுவில் அவர் கூறி உள்ளதாவது;
18 வயதுக்கு குறைவானவர்களை வைத்து விஜய் பிரசாரம் மேற்கொண்டார். வருமானவரி பாக்கி உள்ளதை மறைத்து, பாக்கி இல்லை என்று வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி அடையாளங்களுடன் முட்டிபோட்டு தேவாலயத்தில் பிரசாரம் செய்துள்ளார். தேர்தல் செலவு கணக்கு விவரங்களையும் இதுவரை தாக்கல் செய்யவில்லை. முறைகேடுகளை செய்து விஜய் வெற்றி பெற்றுள்ளதால் அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
எம்எல்ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்துவிட்டதால் தன்னையே வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை, திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக்கூடாது.
இவ்வாறு மனுவில் இனிகோ இருதயராஜ் கறிப்பிட்டுள்ளார்.