நெல்லை அருகே முன்னாள் பஞ். தலைவரின் சகோதரர் வெட்டிக்கொலை
1 min read
Former Panchayat President’s brother hacked to death near Nellai.
16.6.2026
நெல்லை மாவட்டம், மேலக்கல்லூர் அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 55). விறகு வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி பரமேஸ்வரி தம்பதிக்கு முத்து என்ற மகனும், அன்னலட்சுமி என்ற மகளும் திருமணமாகி இருவரும் கோவையில் வசித்து வரு கின்றனர்.
மேலக்கல்லூரில் உள்ள சப்பானி மாடசாமி கோயில் முன்பு சண்முகவேலும், அவரது நண்பர்களும் நேற்று இரவு பேசிக்கொண்டிருந்தனர். சுமார் 7.30 மணி அளவில்
அப்போது ஹெல்மெட் அணிந்த வண்ணம் இரு பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், சண் முகவேலிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த கும்பல், அரிவாளால் சரமாரியாக சண்முகவேலை வெட்டிவிட்டு தப்பியோடியது.
சண்முகவேலின் உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சண்முகவேல் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு, எஸ்பி பிரசண்ணகுமார் தலைமையில் அம்பை, சேரை டிஎஸ்பிக்கள், சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார், கொலை நடந்த இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து கொலையாளிகள் குறித்த விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
மேலும் குற்றவாளிகளை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சண்முக வேலின் தம்பியான மாரியப்பன் (வயது 48), மேலக்கல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சுத்தமல்லி போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்த நிலையில் ஒரு இளஞ்சிறார் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.