June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிகள் பயிற்சி வகுப்பு

1 min read

Tenkasi: Training session for National Population Census 2027 operations

18/6/2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிப் பிரிவு கூட்டரங்கில் இன்று (18.06.2026) தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிகள் மேற்கொள்வது தொடர்பாக கள பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத்சிங், தலைமையில் நடைபெற்றது.

பின்னர் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவிக்கையில் கூறியதாவது:-

தென்காசி மாவட்டத்தில் தேசிய ‘மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027″ களப் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்றைய தினம் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் தேசிய திட்டமிடல் கொள்கை உருவாக்குவதில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த ஒரு கண்ணோட்டத்தை வழங்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இல் முக்கிய அம்சங்கள் மற்றும் வழிமுறைகளை விளக்க வேண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்பாட்டின் தரவுத் துல்லியத்தில் முக்கியத்துவத்தை பங்கேற்பாளர்கள் புரிந்து கொள்வதை உறுதி செய்திட வேண்டும்.

கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர் களின் பணி நடைமுறை பற்றிய விழிப்புணர்வை உருவாக்கிட வேண்டும் போன்றவை இதன் நோக்கமாகும். அதனடிப்படையயில் இன்றைய தினம் தென்காசி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் பகுதியாக கணக்கெடுப்பாளர் கள். மேற்பார்வையாளர் களுக்கு பயிற்சி வழங்கக் கூடிய களப்பயிற்றுநர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு இன்று முதல் 3 நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியினை கள பயிற்சியாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கணக்கெடுப்பு பணியினை சிறப்பான முறையில் நேர்த்தியாகவும். குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பயிற்றுநர்கள் ராஜா, ஆ.காளிமுத்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு இணை இயக்குநர் சின்னதுரை, இராதாகிருஷ்ணன். அபிஷா சந்தோஷ், தனி வட்டாட்சியர் (மக்கள் தொகை கணக்கெடுப்பு) சண்முகம் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *