செங்கோட்டையில் வாஞ்சிநாதன் நினைவு தினம்-ஆட்சியர் அஞ்சலி
1 min read
Vanchinathan’s Death Anniversary at Sengottai – District Collector Pays Tribute
18.6.2026
தென்காசிமாவட்டம், செங்கோட்டை நகராட்சி பகுதிகளில் உள்ள முத்துசாமி பூங்காவில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர்வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் வைத்து வாஞ்சிநாதனின் 115வது நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவா் ரஞ்ஜீத்சிங் மணிமண்டபத்தில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு மலா் மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர்மன்ற தலைவா் இராமலெட்சுமி, முன்னாள் நகர்மன்ற தலைவா் செங்கோட்டை எஸ்எம்.ரஹீம் ஆணையாளா் மற்றும் வாஞ்சிநாதன் வாரிசுகள் வாஞ்சிகோபாலகிருஷ்ணன், லெட்சுமி மற்றும் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
அதனைதொடா்ந்து செங்கோட்டை பேரூந்துநிலையம் அருகே உள்ள வாஞ்சிநாதன் முழுஉருவ சிலை முன்பு வைத்து வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டுவிட்டு தன்னுயிரையும் நீத்த நேரமான 10.45 மணிக்கு அவரது முழுஉருவ சிலைக்கு வாஞ்சி இயக்க நிறுவனத் தலைவா் பி.ராமநாதன் மாலை அணிவித்து மலர்துாவி மரியாதை செய்தார்.
அதனைதொடா்ந்து நகர அதிமுக சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஞானராஜ், ஜாகீர்உசேன், மாவட்ட மருத்துவ அணி பொருளாளா் சித்தமருத்துவா் டாக்டர் கலா, நகர்மன்ற துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணி, முத்துப்பாண்டி, சுடர்ஒளி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள் திலகர், செந்திஆறுமுகம், கனியத்தா நகர எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளா் சக்திவேல், கழக நிர்வாகிகள் மரியாதை செய்தனா். நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் நகர தலைவர் ஜோதிலிங்கம் தலைமையில் வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை மாவட்ட தலைவர் ராஜீவ்காந்தி, நகர்மன்ற உறுப்பினர் முருகையா, முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ஆதிமூலம், நகர பொதுச் செயலாளர் சுடலைமுத்து, நகர விவசாய அணி தலைவர் பீர்முகம்மது, வார்டு தலைவர் விமல்ராஜ், மாரியப்பன் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாரியப்பன், சுப்பிரமணி .
நகர தமிழக வெற்றி கழகம் சார்பில் நகரச்செயலாளா் பிரம்மாகிருஷ்ணன்(எ)ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை செய்தனா்.
தமிழ்நாடு பிராமணர் சங்கர் சார்பில் செங்கோட்டை நகரத்தலைவா் மருத்துவா் ஹரிஹரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செய்தனா். மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பிராமண சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செய்தனா்