June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

இரு மொழிக்கொள்கை தொடரும்: சட்டசபையில் கவர்னர் உரை

1 min read

Two-language policy to continue: Governor’s address in the Assembly

18.6.2026
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) கவர்னர் அர்லேக்கர் உரையுடன் கூடியது. தமிழகத்தின் கடன் அளவு ரூ.10 லட்சம் கோடியை தாண்டி உள்ளது என கவர்னர் அர்லேக்கர் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தலில், 108 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. த.வெ.க., அமைச்சரவையில் காங்கிரஸ், வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் இடம்பெற்று உள்ளன. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியிலிருந்து அரசுக்கு ஆதரவளித்து வருகின்றன.

கவர்னர் உரை
த.வெ.க., கூட்டணி அரசில், 34 அமைச்சர்கள் இடம்பெற்று உள்ளனர். முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் இன்று (ஜூன் 18) கூடியது. கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் சட்டசபையில் உரை நிகழ்த்தினார். அவர் தமிழில் வணக்கம் சொல்லி தனது உரையை துவங்கினார்.

சட்டசபையில் கவர்னர் அர்லேக்கர் ஆற்றிய உரை:

  • தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை, 2024-25ல் ரூ.48 ஆயிரத்து 840 கோடியாக இருந்தது, ஒரே ஆண்டில் ரூ.78 ஆயிரத்து 324 கோடியாக அதிகரித்துள்ளது.
  • 1967ல் அண்ணாதுரை, 1977ல் எம்ஜிஆருக்கு பிறகு 2026ல் வரலாற்று புரட்சி. விசில் புரட்சி மூலம் இமயமலை அளவுக்கு வெற்றியை விஜய் பதிவு செய்துள்ளார்.
  • கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகும் நிலையில் மக்களின் பெரும் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது தமிழக வெற்றிக் கழகம்.
  • விஜய்யால் மட்டுமே தமிழகத்தை ஆள முடியும் என மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்; சட்டசபையில் மக்களுக்காக விவாதிப்பீர்கள் என நம்புகிறேன்.
  • ஜாதி, மதங்களை கடந்து பணம் கொடுக்காமல் தவெகவை மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர்.
  • தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய பல்வேறு நிதி தொடர்பாக மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். மத்திய அரசு இதை பரிசீலனை செய்து அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
  • தமிழகத்தின் கடன் அளவு ரூ.10லட்சம் கோடியை தாண்டி உள்ளது. ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் கடன் உள்ளது.
  • மும்மொழிக்கொள்கையை வலியுறுத்தி, மாநிலத்துக்கான கல்வி நிதியை மறுக்கக்கூடாது. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே தொடரும்.
  • தற்போது மத்திய, மாநில அரசுகளுக்கான பொது பட்டியலில் இருக்கும் கல்வித்துறையை, மாநில பட்டியலுக்கு மாற்ற இந்த அரசு முயற்சிகளை மேற்கொள்ளும்.
  • பொது அமைதியை பேணிப் பாதுகாப்பது சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி மகளிர் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பதான சூழலை உருவாக்குவதே இந்த அரசின் முதன்மையான லட்சியமாகும்.
  • தமிழக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் படை பலம், பண பலம், அதிகார பலத்தை மீறி முதல்வர் விஜய் தலைமையிலான இந்த அரசை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இம்மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டியது இந்த அரசின் கடமை.
  • பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்றார் போல அனைவருக்குமான அரசாக, மக்களுக்கான அரசாக விருப்பு வெறுப்பின்றி நேர்மையாக, வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி இந்த அரசு செயல்படும்.
  • எத்தனை தடைகள் வந்தாலும், அனைத்தையும் தகர்த்தெறிந்து ஊழலற்ற,நேர்மையான நிர்வாகத்தைத் தந்து அதன் மூலம் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்திட இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. அரசின் நலத் திட்டங்கள் அனைத்துப் பிரிவினரையும் சென்றடைய இந்த அரசு செயலாற்றும். இந்த அரசால் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் மாநிலத்தின் நிதிநிலையை சீரமைத்து வருங்காலங்களில் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.

மரியாதை
முன்னதாக கவர்னர் அர்லேக்கரை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் வரவேற்றார். கவர்வனருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. போலீசார் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் அர்லேக்கர் ஏற்றுக்கொண்டார். த.வெ.க., அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பலரும் புதியவர்கள்.

இவர்களுக்கு, சட்டசபை செயலகம் வாயிலாக இரண்டு நாள் பயிற்சி வகுப்பு சட்டசபைக்கு வந்துள்ளனர். சட்டசபையில் எப்படி செயல்பட வேண்டும்; எதிர்க்கட்சியினர் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என, அமைச்சர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன. அரசு துறை செயலர்களும், அமைச்சர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.

இரண்டு நாள் பயிற்சி முடித்த கையோடு, இன்று சட்டசபை கூட்டத்தில் அமைச்சர்களும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்றனர். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின்போது, எதிர்க்கட்சிகள் தரப்பில் சட்டம் – ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப வாய்ப்பு உள்ளது. இதற்கு, அமைச்சர்கள் எப்படி பதில் அளிக்கப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *