பாபநாசம் சொரிமுத்தைய்யனார் கோவிலில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு
1 min read
Minister Ramesh inspects Papanasam Sorimuthaiyanar Temple.
27.6.2026
நெல்லை மாவட்டம் பாபநாசம் சொரிமுத்தையனார் கோவிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாபநாசம் அருள்மிகு சொரிமுத்தையனார் திருக்கோயிலில் பொதுமக்கள் வசதிக்காக மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் மேம்பாட்டுப் பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சொரிமுத்தையனார் கோவிலில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு பணிகள் பற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சருடன் உடன் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன், சேரன்மாதேவி சார் ஆட்சியர் ஆயுஷ் குப்தா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.