தென்காசி: மருத்துவ- நல்வாழ்வு துறை திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு
1 min read
Tenkasi: Minister reviews Medical and Health Department scheme works.
27.6.2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வி.கே.ராஜீவ் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங், முன்னிலையில் மருத்துவ மற்றும் நல்வாழ்வு துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தென்காசி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைந்துள்ள மருத்துவ கட்டமைப்பு, மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் ஒப்பீடு குறித்த ஆண், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம், அதிக குழந்தைகள் பிறப்பு விகிதம், அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பு, எடை குறைவுள்ள குழந்தைகள் சதவீதம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் பயனாளிகள் விபரம், ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய விபரம், ஜனனி சிசு சுரக்க்ஷா பயனாளிகள் விபரம், ஜனனி சுரக்ஷா யோஜனா பயனாளிகள் பற்றிய விபரம், தடுப்பூசி குறியீடு அடைதல், மகப்பேறு இறப்பு அளவீடு ஆய்வு, கைக்குழந்தைகள் இறப்பு அளவீடு ஆய்வு, பள்ளி சிறார் நலத்திட்டம், ஆரம்ப சுகாதார நிலையங்களின் தேசிய தர நிர்ணயம் பற்றிய ஆய்வு, தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் குறித்து மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வி.கே.ராஜீவ் , மாவட்ட ஆட்சித் தலைவர் த
ரஞ்ஜீத்சிங் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க தென்காசி மாவட்டத்தின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து பல்வேறு திட்ட களப்பணி ஆய்வு மேற்கொண்டதில் தென்காசி மாவட்டம் சுற்றுலா பயணிகள் அடிக்கடி வரும் பகுதியாக அமைந்துள்ளது. இதனால் சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றன, அதனைக் குறைக்கும் வகையில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இன்றைய தினம் மருத்துவம் மற்றும் நலப்பணிகள் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தலைமை மருத்துவமனைக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் கிடைக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். தொடர்ந்து, தென்காசி மாவட்டத்திற்குத் தேவையான அனைத்து வளர்ச்சித் திட்டத்தை பூர்த்தி செய்யும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் வி.கே.ராஜீவ் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கோவிந்தன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.பிரேமலதா, தென்காசி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. இரா.ஜெஸ்லின், அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர்கள், மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.