தமிழகத்திற்கு வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு
1 min read
Cauvery Authority orders release of 2,000 cubic feet of water per second to Tamil Nadu
25/11/2026
தமிழகத்திற்கு, அடுத்த 15 நாட்களுக்கு, வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறக்க, காவிரி மேலாண்மை ஆணை யம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், டில்லியில் இன்று (நவ.,25) நடந்தது. தமிழகத்தின் சார்பில், காவிரி தொழில் நுட்பப் பிரிவு தலைவர் சுப்பிரமணியம், நீர்வளத்துறை செயலர் பிரசாந்த் வடநேரே ஆகி யோர், நேரில் பங்கேற்றனர்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக இருந்த எஸ்.கே.ஹல்தார் ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து புதிய தலை வராக நியமிக்கப்பட்டுள்ள, பியூஷ் சிங் தலைமையில் கூட்டம் நடந்தது.
கர்நாடக, தமிழக அணைகளில் உள்ள நீர் இருப்பு நிலவரங்கள் குறித்து, இரு தரப்பிலும் எடுத்துரைக்கப்பட்டது. தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு, வினாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்க, காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் உத்தரவிட்டார்.
கர்நாடக அணைகளில் உள்ள நீரை, அம்மாநில அரசு தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு தமிழகம் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தும், அதனை காவிரி ஆணைய புதிய தலைவர் கண்டு கொள்ளவில்லை.
காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்கனவே பலமுறை உத்தரவிட்டும், அந்த உத்தரவை, கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை. தற்போது பிறப்பித்துள்ள உத்தரவையும், கர்நாடகா பின்பற்ற வாய்ப்பில்லை.
டில்லிக்கு சென்ற காவிரி தொழிற்நுட்ப பிரிவு தலைவர், நீர்வளத்துறை செயலர் ஆகியோர், அவசரமாக இன்று இரவு சென்னை திரும்பினர். உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள், ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவு, கர்நாடகா அரசிற்கு சாதகமாக மாறி உள்ளது. இவ்விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து, முதல்வர் விஜய் தலைமையில், விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது.