தவெகவில் மேலும் பலர் இணைவர் – சி.விஜயபாஸ்கர் பேச்சு
1 min read
Many more will join TVK – C. Vijayabaskar’s remarks
2.7.2026
தவெகவில் இணைந்த பிறகு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
“பழைய தலைமையின் மீதான வெறுப்பால் பலர் தவெகவில் இணைந்துள்ளனர். இன்னும் பலர் தங்களை இணைத்துக்கொள்வர். திமுக ஆட்சியில் நாங்கள் பல வழக்குகளை கண்டோம். பதவி ஆசைக்காக தவெகவுக்கு வரவில்லை. ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்றால் நாங்கள் திமுகவுக்கு சென்றிருப்போம். மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளோம்.
தேர்தலுக்கு மும்பே தவெகவுடன் கூட்டணி வைப்போம் என பலமுறை கூறினோம். எங்கள் பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை. மக்களின் தீர்ப்பை மதிக்கும் நோக்கில், தேர்தலுக்கு பிறகும் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்போம் என்றோம். அதையும் செய்யவில்லை.
வயிற்றொரிச்சல் காரணமாக எங்கள் மீது விமர்சனங்களை வைக்கத்தான் செய்வார்கள். மேலும் பலர் தவெகவில் இணைவார்கள். இது வெறும் டிரைலர்தான். விரைவில் டெல்டாவில் நடைபெறும் விழாவில் பலர் கலந்துகொள்வார்கள்.”
இவ்வாறு அவர் கூறினார்.