ஈரோட்டில் தமிழ்நாடு இளைஞர் காங். முன்னாள் நிர்வாகிகள் ஆக.1-ல் சந்திப்பு
1 min read
Former Tamil Nadu Youth Congress office-bearers to meet in Erode on August 1.
2.7.2026
ராமநாதபுரம் மாவட்டம் வழக்கறிஞர் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பரமக்குடி வழக்கறிஞர் சரவண காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
ஈரோடு மாவட்டம் ஈரோட்டில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகிகள் சந்திப்பு
ஆகஸ்டு 1 ம்தேதி நடைபெற உள்ளது.இதனை சிறப்பாக திட்டமிட்டு, ஒருங்கிணைத்து, வெற்றிகரமாக நடத்துவதற்காக, இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான முகம்மது ஷாஹித் ஒருங்கிணைப்புக் குழுவை நியமித்துள்ளார்.
ஒருங்கிணைப்பு குழுவில் தென்காசி பி.பாக்கியராஜ், கன்னியாகுமரி ஆர்.லாரன்ஸ், திருப்பூர் வடக்கு ஆர்.கே. சரவணன் உள்பட 16 பேர் இடம் பெற்றுள்ளனர்.மேலும் இக் குழுவில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வழக்கறிஞர்
சரவண காந்தி ஒருங்கிணைப்பாளராக நியமன செய்யப் பட்டுள்ளார்.