July 5, 2026

Seithi Saral

Tamil News Channel

மக்கள் தங்கள் பிரச்னைகளை தெரிவிக்கலாம்; கவர்னர் அர்லேக்கர் அழைப்பு

1 min read

People can voice their grievances; Governor Arlekar invites them.

4.7.2026
மக்கள் தயக்கம் இன்றி பிரச்னைகளை லோக் பவனில் தெரிவிக்கலாம் என தமிழக கவர்னர் அர்லேக்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் புத்தகம் வெளியிட்டு விழாவில் கவர்னர் அர்லேக்கர் பேசியதாவது:-

மக்கள் பிரச்னைகளை லோக் பவனில் தெரிவிக்கலாம். மக்கள் பிரச்னையை தீர்க்க தவெக அரசுடன் இணைந்து செயல்படுவேன். மக்கள் பிரச்னைகளுக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்.
தயக்கமின்றி மக்கள் பிரச்னைகளை கூற வேண்டும். தேவைப்பட்டால் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணுமாறு முதல்வரிடம் கூறுவேன். கவர்னரிடம், அரசிடமும் எதிர்பார்ப்பு இருந்தால் தெரிவியுங்கள். நமது சமுதாயத்தில் சமூக நல்லிணக்கம் இல்லாமல் போனது தான் மிகப்பெரிய பிரச்னை. இவ்வாறு கவர்னர் அர்லேக்கர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *