ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
1 min read
DMK’s case against Aadhav Arjuna to be heard in the Supreme Court tomorrow
6.7.2026
ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி, த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
மேலும், விசாரணையை சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய்ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்பு குழு மேற்பார்வையிடும் என்றும் உத்தரவிட்டது. இந்த நிலையில், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் வக்கீல் அனுராதா அற்புதம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசிய பேச்சு வழக்கின் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பாதிக்கும் நோக்கத்துடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே, அவர் மீது உரிய புகாரை பதிவு செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும். கரூர் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வருகிற 10-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்ல இருப்பதாகவும், அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருப்பது தெரியவந்துள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் சி.பி.ஐ. விசாரணையை பாதிக்கக்கூடும் என்பதால், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்பு சி.பி.ஐ.யின் அனுமதி பெறும் வகையில் உரிய வழிகாட்டுதல்களை சுப்ரீம் கோர்ட்டு வகுக்க வேண்டும். அத்துடன், சி.பி.ஐ. விசாரணை நிறைவடையும் வரை கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்து முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்சி ஆனந்த், சி.டி.நிர்மல் குமார் உள்ளிட்டோர் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்த மனு நீதிபதி அசானுதுதீன் அமனுல்லா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் ஆஜரான வக்கீல் மனுவை அவரசமாக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். இதனை ஏறுக்கொண்ட நீதிபதி நாளை (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்தார். இதன்மூலம் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.