July 6, 2026

Seithi Saral

Tamil News Channel

அமெரிக்க தமிழ் விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்பு; இந்திய துணை தூதர் வாழ்த்து

1 min read

Minister Rajmohan participates in American Tamil festival; Indian Deputy Consul General conveys best wishes.

6/7/2026
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் நடைபெற்ற 39-வது தமிழ் விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் நியூ ஜெர்சி தமிழ்ப் பேரவை இணைந்து 39-வது தமிழ் விழாவை நடத்தியது. இந்த விழாவில், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்று, ‘வான்புகழ் வள்ளுவம்’ என்ற ஆவணப் படத்தை வெளியிட்டார்.

மேலும், அங்குள்ள ஹூஸ்டன் நகரில், அமைச்சர் ராஜ்மோகனை ஹூஸ்டனுக்கான இந்தியத் துணைத் தூதரகத்தின் இந்திய துணைத் தூதர் டி.சி.மஞ்சுநாத், தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வரவேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தார்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *