July 6, 2026

Seithi Saral

Tamil News Channel

கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற இந்தியாவுக்கு ஈரான் நன்றி

1 min read

Iran thanks India for participating in Khamenei’s funeral.

6.7.2026
கமேனியின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்றதற்காக இந்தியாவுக்கு ஈரான் அரசு நன்றி தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். தற்போது, இரு நாடுகளிடையே போர் சற்று தணிந்த நிலையில், கமேனியின் இறுதிச்சடங்கை ஈரான் அரசு நடத்தி வருகிறது.

டெஹ்ரான் மற்றும் கியோம் ஆகிய நகரங்களில் துவங்கிய கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் ஜூலை 9ம் தேதி வரை நடைபெறுகின்றன. இறுதி அடக்கச் சடங்கு கமேனியின் பிறந்த இடமான மஷாத் நகரில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கமேனியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா மற்றும் பீஹார் கவர்னர் அடா ஹஸ்னைன் உள்ளிட்டோர் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், கமேனியின் இறுதிச்சடங்களில் பங்கேற்றதற்காக இந்தியாவுக்கு ஈரான் அரசு நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஈரான் தூதரகம் வெளியிடப்பட்ட அறிக்கையில்; ஈரான் அரசின் ஆட்சியாளர் அயதுல்லா செய்யது அலி கமேனியின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்று அஞ்சலி செலுத்தியதற்காக, நட்பு ரீதியான இந்திய அரசுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்றது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நீண்டகால உறவைப் பிரதிபலிக்கிறது. மேலும், துயரத்தின் போது ஈரான் மக்களுடன் பரஸ்பர மரியாதை மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய செயலாகவும் இது அமைந்தது, என்று அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *