லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் பணியிட மாற்றம்
1 min read
Director of the Directorate of Vigilance and Anti-Corruption, Arun, transferred.
13.7.2026
தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக அருண் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் லஞ்சப் பணத்துடன் பலர் சிக்கினர்.
இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையின் புதிய இயக்குநராக மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் இந்த கடுமையான விமர்சனங்களை அடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையின் நற்பெயரைக் காக்கும் பொருட்டு, அத்துறையின் புதிய தலைவராக ஐஜி சி.மகேஸ்வரி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொறியியல் பட்டதாரியான சி.மகேஸ்வரி, தகவல் தொழில்நுட்பத் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். காவல்துறை மீது இருந்த ஆர்வத்தால், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வெழுதி, 1997ஆம் ஆண்டு நேரடியாகத் துணைக் காவல் கண்காணிப்பாளராக தனது பணியைத் தொடங்கினார்.
காவல்துறையில் அவரது சிறப்பான பணிக்காக 2003-ல் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும, 2006-ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணி அதிகாரியாகவும் பதவி உயர்வு பெற்றார்.
கரூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். சென்னை மாநகர காவல்துறையின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களின் இணை ஆணையராக சட்டம்-ஒழுங்கைத் திறம்படக் கையாண்டவர். சேலம் சரக டிஐஜியாகவும் சிறப்பாகப் பணியாற்றினார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு நெல்லை மாநகரத்தின் வரலாற்றிலேயே முதல் பெண் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டு சாதனை படைத்தார்.
இவரது நேர்மையான மற்றும் திறமையான சேவையைப் பாராட்டி, தமிழக அரசின் ‘முதலமைச்சர் அண்ணா பதக்கம்’ (2016) மற்றும் மத்திய அரசின் ‘குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்’ (2019) ஆகிய உயரிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
லஞ்ச ஒழிப்புத்துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் ஐஜியாக இருந்த மகேஸ்வரி, தற்போது ஒட்டுமொத்த லஞ்ச ஒழிப்பு அமைப்பையும் வழிநடத்தும் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.