July 13, 2026

Seithi Saral

Tamil News Channel

கல்லூரணி ஊராட்சியில் இலவச கண்சிகிச்சை முகாம்

1 min read

Free Eye Camp in Kallurani Panchayat

13.7.2026
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர்ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்லூரணி ஊராட்சியில், ஊராட்சி மன்றம் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

பாவூர்சத்திரம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற
இம்முகாமினை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கலைகதிரவன் தொடங்கி வைத்து, பொதுமக்கள் இதுபோன்ற மருத்துவ முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த முகாமில் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவ பத்மநாதன், பாவூர்சத்திரம் தொழிலதிபரும் திமுக நிர்வாகியுமான சேவியர் ராஜன், கல்லூரணி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜ்குமார், மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குமார், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சுரண்டை முத்துக்குமார், மாவட்ட திமுக பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ், கழக வழக்கறிஞர் அரிகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் செட்டியூர் ஹரி, திமுக நிர்வாகிகள் ஒயிட் ராஜா, ஆல்வின் ராஜா, சுந்தர்ராஜ், குரு சிங், ஊராட்சி உறுப்பினர் பொட்டு தாய், தங்கப்பாண்டியன், அருள், ஜூல்லியஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்துகொண்டனர்.அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு, தேவையான வர்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் மேல்சிகிச்சைக்கான பரிந்துரைகளையும் வழங்கினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *