July 14, 2026

Seithi Saral

Tamil News Channel

வியட்நாம் விபத்தில் பலியான தமிழர்கள் உடல்கள் சென்னை வந்தன

1 min read

Bodies of Tamils ​​who died in the Vietnam accident arrived in Chennai; handed over to their families

14/7/2026
வியட்நாம் படகு விபத்தில் பலியான 10 தமிழர்களின் உடல்களும் அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
வியட்நாமின் புகுவோக் தீவு அருகே ஜூலை 11ம் தேதி கடலில் படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10 தமிழர்கள் உள்பட 15 இந்திய சுற்றுலா பயணிகள் பலியாகினர். செல்போன் நிறுவனம் ஒன்று தமது வினியோகஸ்தர்களை சுற்றுலா அழைத்துச் சென்ற போது இந்த துயரம் அரங்கேறியது.
உயிரிழந்த 15 பேரின் உடல்களும் விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து இன்று (ஜூலை 14) சென்னை விமான நிலையம் எடுத்து வரப்பட்டது.

அங்கு அஞ்சலி செலுத்திய பின்னர், அவர்களின் உடல்கள் குடும்பத்தாரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரவர் சொந்த ஊருக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *