July 15, 2026

Seithi Saral

Tamil News Channel

ரெயில் பெட்டியில் பூஜை: ரெயில்வே விளக்கம்

1 min read

Puja in train coach: Railway’s clarification

14.7.2026
ரெயில் பெட்டி ஒன்றினுள் பூசாரி ஒருவர் ஆன்மீக பூஜைகள் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதைப் பார்த்த பலரும் ரெயிலுக்குள் எப்படி பூஜை செய்யலாம் என ஆச்சரியம் அடைந்த நிலையில், இந்திய ரெயில்வே நிர்வாகம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில்
அந்த நபர் பயணம் செய்த ரெயில் பெட்டி பொதுவான பெட்டி அல்ல என்றும், அது பிரத்யேகமாக முன்பதிவு செய்யப்பட்ட சொகுசு பெட்டி என்றும் ரெயில்வே தெரிவித்துள்ளது.
சொகுசு பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் தங்களுக்குத் தேவையான பூஜைகளைத் தகுந்த அனுமதியுடன் நடத்திக்கொள்ள அனுமதி உண்டு என்று ரெயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *