இந்தியாவில் ‘கிளி’ வைரஸ் கண்டுபிடிப்பு
1 min read
‘Parrot’ virus discovered in India
15/7/2026
இந்தியாவில் முதல் முறையாக கிளி போர்னா 4 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் கூண்டுகளில் வளர்க்கப்படும் கிளிகளுக்கு கடுமையான நோய்கள் உருவாகும். சிகிச்சை அளித்து, சில நேரங்களில் ஏற்படும் திடீர் மரணங்களுக்கும் இந்த பிஏபிவி4 வைரஸ்தான் முக்கியக் காரணியாக இருந்து வருகிறது.
இந்த வைரஸ் சாதாரண பறவைகளைத் தாக்குவதில்லை. கிளிகள், பஞ்சவர்ணக் கிளிகள், கொண்டைக்கிளி கள், காசுட்டீல்கள், லவ் பேர்ட்ஸ் மற்றும் பட்ஜரீகர்கள் உள்ளிட்ட சிட்டாகைன்’ குடும்பத்தைச் சேர்ந்த பறவையினங்களையே குறி வைத்துத் தாக்குகிறது.
இந்த நிலையில் அசாம் விஞ்ஞானிகள்இந்தியாவில் முதன்முறையாகக் ‘கிளி போர்னா வைரஸ் 4’ தொற்றைக் கண்டறிந்துள்ளனர். கூண்டில் வளர்க்கப்படும் கிளிகளைத் தாக்கும் இந்த வைரஸ், பிடி டி என்ற ஆபத்தான நோயை ஏற்படுத்துகிறது. இதுபறவைகளின் செரிமான மற்றும் நரம்பு மண்டலங்களைப் பாதித்து, உடனே உயிரிழக்கச் செய்யும்.
அசாம், கர்நாடகா, மேற்கு வங்கத்தில் 83 பறவைகளிடம் நடத்திய ஆய்வில் 44 பறவைகளுக்கு இந்தத் தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக செரிமான உறுப்புகள் சரியாக செயல்படாது. உணவை ஜீரணிக்க முடியாமல் போகும். நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும். சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழப்பும் ஏற்படலாம்.
இந்தவைரஸ் தாக்கிய கிளிகளில் உடல் எடை வேகமாக குறைதல், உணவை விழுங்குவதில் சிரமம், ஜீரணிக்காத உணவு மலத்துடன்வெளியேறுதல், வாந்தி உண்டாகும். இந்தியாவில் இந்தவைரஸ் இருப்பதை உறுதிப்படுத்திய முதல் ஆய்வாகும். எனவே பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.