July 16, 2026

Seithi Saral

Tamil News Channel

பலாத்காரம் செய்த வரையே திருமணம் செய்த பெண்-கோர்ட்டு தீர்ப்பு

1 min read

Woman marries the man who raped her – Court verdict

16.7.2026
மராட்டிய மிரா ரோடு பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர் மீது, 26 வயது திருமணமான பெண் ஒரு வர் கடந்த 2022-ம் ஆண்டு போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், “சமூகவலைத்தள விளம்பரம் மூலம் பழகிய இந்த வாலிபர், தன்னை ஆசைவார்த்தை கூறி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும், தங்களது ரகசிய உரையாடல்களை எனது கணவரிடம் காட்டிவிடுவேன் என்று மிரட்டி தன்னிடம் இருந்து ரூ.1.79 லட்சம் பணத்தையும் பறித்துக் கொண்டார்” என்று குற்றம்சாட்டியிருந்தார். இதன் அடிப்படையில் போலீசார் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

ம்ராட்டிய மிரா ரோடு பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர் மீது, 26 வயது திருமணமான பெண் ஒரு வர் கடந்த 2022-ம் ஆண்டு போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், “சமூகவலைத்தள விளம்பரம் மூலம் பழகிய இந்த வாலிபர், தன்னை ஆசைவார்த்தை கூறி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும், தங்களது ரகசிய உரையாடல்களை எனது கணவரிடம் காட்டிவிடுவேன் என்று மிரட்டி தன்னிடம் இருந்து ரூ.1.79 லட்சம் பணத்தையும் பறித்துக் கொண்டார்” என்று குற்றம்சாட்டியிருந்தார். இதன் அடிப்படையில் போலீசார் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை தானே சிறப்பு கோர்ட்டு நீதிபதி பிரேமல் வித்லானி விசாரித்து வந்தார். விசாரணையின்போது, வழக்கில் யாரும் எதிர்பாராத ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அந்தப்பெண், வாலிபருக்கு ஆதரவாக திடீர் வாக்குமூலம் அளித்தார்.

அப்போது முதல் கணவருக்கு என்ன பதில் கூற போகிறாய் என நீதிபதி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில்,

“எங்களுக்குள் இருந்த உடல்ரீதியான உறவு இருதரப்பு சம்மதத்துட னேயே நடந்தது. அவர் மீது எனக்கு இப்போது எந்தப்புகாரும் இல்லை. நான் எனது முதல் கணவரை முறைப்படி விவாகரத்து செய்துவிட்டு, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 17-ந்தேதி இந்த வாலிபரையே முறைப்படி திருமணம் செய்துகொண்டேன்” என்று குண்டை தூக்கிப் போட்டார்.

இதையடுத்து நீதிபதி பிரேமல் வித்லானி பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணே. தங்களுக்குள் இருந்த உடலுறவு பரஸ்பர சம்மதத் துடன்தான் நடந்தது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அப்படி இருக்கும்போது இந்த வழக் கில் பாலியல் வன்கொடுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும், இப்பெண்ணின் தந்தை அளித்த சாட்சியங்கள் அனைத்தும் வெறும் கேள்வி ஞானத்தின் அடிப்படையில் கூறப்பட் டவை என்பதால் அவை நிராகரிக்கப்படுகின்றன.

எனவே, குற்றம்சாட்டப்பட்ட வாலிபர் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் வழக் குகள் ரத்து செய்யப்படுகிறது. அவர் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்படுகிறார்.

இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.

புகார் அளித்த பெண்ணே, அதே வாலிபரை திருமணம் செய்துகொண்டு வழக்கை முடிவுக்கு கொண்டு வந்த சம்பவம் தானே கோர்ட்டில் சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *