பரிசு பொருள் வேண்டாம்-கடையநல்லூர் எம்எல்ஏ அறிவிப்பு
1 min read
No gifts, please – Kadayanallur MLA announces.
19.7.2026
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தி. மு. இராசேந்திரன் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
பொதுமக்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள், கடையநல்லூர்
சட்டமன்ற உறுப்பினரான என்னை சந்தித்து தங்கள் இல்லங்களில் நடைபெறும் திருமணம் மற்றும் இல்ல திறப்பு விழா உள்ளிட்ட
அழைப்பிதழ்கள் கொடுக்க வரும் போது சால்வை, மலர்மாலை அணிவிப்பது மற்றும் பழங்கள், பரிசு போருட்கள் உள்ளிட்ட
தாம்பூல தட்டுகளுடன்
வருவதைத் தவிர்த்து, அழைப்பிதழை மட்டும்
வழங்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
சால்வைகள், மலர்மாலைகள்
தாம்பூல தட்டுகள்,
பரிசு பொருட்கள் உள்ளிட்ட
வீண் செலவுகளை தவிர்ப்போம் ” இப்படிக்கு
தி.மு.இராஜேந்திரன், எம்எல்ஏ
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரின் இந்த அறிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.