ஜனாதிபதி 3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக புறப்பட்டார்
1 min read
President Droupadi Murmu has set out on a state visit to three countries.
19.7.2026
மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய 3 நாடுகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, நாளை மறுநாள் (21-ந் தேதி) மற்றும் 22 ஆகிய தேதிகளில் அவர் வடக்கு மாசிடோனியாவிற்குச் செல்கிறார். ஜூலை 23ம் தேதி முதல் ஜூலை 25ம் தேதி வரை ருமேனியாவிற்கு திரவுபதி முர்மு செல்கிறார்.
இந்திய ஜனாதிபதி ஒருவர் மால்டோவா, வடக்கு மாசிடோனியா, ருமேனியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். ஜூலை 25ம் தேதி பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்புகிறார்.