கரிவலம்வந்தநல்லூர் மலையடிப்பட்டியில் தொல்லியல் துறை காட்சி அரங்கு
1 min read
The Minister inaugurated an Archaeology Department exhibition hall at Malaiyadipatti
19.7.2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் மலையடிப்பட்டியில்
தொல்லியல் துறை காட்சி அரங்கை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் திறந்து வைத்தார்.
தமிழக பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், கரிவலம்வந்தநல்லூர் மலையடிப்பட்டியில் தொல்லியல் துறையின் மூலம் அகழாய்வு பணிகளின் போது கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா இயக்குநர்/சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் தொல்லியல் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.