கார்கில் வெற்றி தினம்: போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மரியாதை
1 min read
Kargil Vijay Diwas: Defence Minister Rajnath Singh pays tribute at the war memorial.
26/7/2026
ஜம்மு காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்தனர்.
போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த கார்கில் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 27-ம் ஆண்டு ஆகும். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்தது.
இன்றைய தினத்தில் போர் நினைவு சின்னத்தில் தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.
கார்கில் போர் வெற்றி தின கொண்டாட்டங்கள் நாடு முழுக்க களைகட்டின. அரசியல் தலைவர்கள், ராணுவம், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பினரும் போரில் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கார்கில் போர் 27வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நேற்று காலை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் லடாக்கில் உள்ள டிராஸ் பகுதிக்குச் சென்றார்.
அங்குள்ள போர் நினைவிடத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக, லடாக் யூனியனில் உள்ள கார்கில் பகுதியில் குளிர் காலத்தில் வெப்பநிலை மைனஸ் 48 டிகிரி செல்சியஸ். 1999 ஏப்ரலில் பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகளுடன் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ‘ஆபரேஷன் விஜய்’ பெயரில் இந்திய ராணுவம் போரிட்டு பாகிஸ்தானை வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.