கனிமங்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்க கேரள முதல் மந்திரி கோரிக்கை
1 min read
Kerala Chief Minister requests lifting of ban on mineral transport.
28.7.2026
தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு கற்கள், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களுக்கு அதிகளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதால், தமிழ்நாட்டிற்கு செயற்கை தட்டுப்பாடு எழுவதாகவும், தங்கு தடையின்றிப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய இந்த தற்காலிகத் தடை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என கேரள முதல் மந்திரி வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய்க்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசின் இந்த தடை உத்தரவால் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பெரிய உள்கட்டமைப்பு பணிகள் பாதிக்கப்படுகின்றன எனவும், உடனடியாக கனிமவள தடையை நீக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.