நாளை அனைத்து நியாய விலை கடைகளிலும் இகேஒய்சி பணிகள் தீவிரம்
1 min read
e-KYC operations to be intensified at all fair price shops tomorrow.
1/8/2026
\தென்காசி மாவட்டத்தில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நாளை (02.08.2026) விரல் ரேகை, கண் கருவிழி சரிபார்ப்பின் மூலம் cKYC பணி நடைபெற உள்ளது.
என்று மாவட்ட ஆட்சியர் திருரஞ்ஜீத் சிங், தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
தமிழக உணவுதுறை அமைச்சர் அவர்களால் நாளது தேதி வரையில் நியாயவிலைக் கடைகளில் cKYC மேற்கொள்ளாத அனைத்து குடும்ப அட்டை பயனாளிகளுக்கும் 02.08.2026 அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விற்பனை முனைய இயந்திரம் முலமாக விரல் ரேகை/கண் கருவிழி சரிபார்ப்பின் முலம் cKYC மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்,2013 இன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன் படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது.
எனவே, eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு (02.08.2026) அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விற்பனை முனைய இயந்திரம் மூலமாக விரல் ரேகை,கண் கருவிழி சரிபார்ப்பின் மூலம் eKYC பணி நடைபெற உள்ளது. எனவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் (02.08.2026) அன்று நியாய விலைக்கடைகளில் நடைபெறும் இச்சிறப்பு முகாமில் தவறாது கலந்து கொள்ளச் செய்து விரல் ரேகை கண் கருவிழி சரிபார்ப்பின் மூலம் cKYC பதிவு செய்து பயன்பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வாறு ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.