August 2, 2026

Seithi Saral

Tamil News Channel

சாம்பவர் வடகரையில் இசைத் தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதர் பிறந்தநாள் விழா

1 min read

Birthday celebration of the scholar of musical Tamil, Abraham Pandithar, at Sambavar Vadakarai.

2.8.2026
இசைத் தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதர் பிறந்தநாள் விழா
அவர் பிறந்த ஊரான தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சாம்பவர் வடகரை இந்து நாடார் உறவின்முறை நாட்டாண்மை வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் மற்றும் நிர்வாகிகள் ஆபிரகாம் பண்டிதரின் உருவ படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினர்.

இந்த விழாவில் அகரக்கட்டு லூர்து நாடார் பேசும் போது சாம்பவர் வடகரையில் ஆபிரகாம் பண்டிதர் இந்துவாகப் பிறந்து கிறிஸ்தவராக வளர்ந்து சுருளிமலை சித்தர் கருணாணந்த சுவாமிகளின் சீடராக கடைசி வரை வாழ்ந்தவர். மேலும் தமிழனின் இசை தான் உலகின் மூத்த இசை இதில் இருந்து பிறந்தது தான் கர்நாடக இசை என்று உலகுக்கு அறிவித்து ,7 இசை மாநாடுகளை நடத்தி நிரூபித்து வெற்றி கண்டவர். பல நாடுகளுக்கும் சென்று இசை ஆராய்ச்சி பற்றி விளக்கம் அளித்து தமிழனின் இசை தான் மூத்த இசை என்று நிரூபித்தவர். புதிய புதிய இசை கருவிகளையும் புதிய புதிய ராகங்களையும் தனது ஆய்வின் மூலம் கண்டுபிடித்தவர் ஆபிரகாம் பண்டிதர்.

இவர் எழுதிய கர்ணாமிர்தம் சாகரம் திரட்டு என்ற இசை ஆராய்ச்சி நூல்தான் இன்றளவும் எல்லா இசை பள்ளிகளிலும் முதல் நூலாக மூத்த நூலாக விளங்கி வருகிறது.சித்த மருத்துவத் துறையில் பல பதக்கங்களையும் பட்டங்களையும் பெற்றவர். வேளாண்மை துறையில் பல சாதனைகள் படைத்தவர். செங்கரும்பு, கிளிமூக்கு மாங்காய், கத்தரிக்காய் போன்ற ஒட்டு ரக காய்கறிகளை கண்டுபிடித்தவர்.இதற்காக ஆங்கிலேய அரசிடம் பல விருதுகள் பெற்றவர் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் குருசாமி நாடார், பொருளாளர் சுப்பிரமணியன், செங்கோட்டை ஒன்றிய தலைவர் மணிகண்டன், ஒன்றிய இளைஞரணி தலைவர் கார்த்திகைக் குமார், ஒன்றிய துணை தலைவர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *