August 2, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றால தேவைகள் பற்றி ரவி அருணன் அமைச்சரிடம் மனு.

1 min read

Ravi Arunan submits a petition to the Minister regarding essential facilities that need in Courtallam.

2.8.2026
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் நேற்று தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த நிலையில் முன்னாள் தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் கே. ரவிஅருணன் அவரை சந்தித்து குற்றாலத்தில் சுற்றுலாத்துறை மூலம் உடனடியாக செய்ய வேண்டிய அடிப்படை மற்றும் மிக அவசியமான கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார்.

அந்தக் கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது :-

  1. குற்றாலத்தில் சுற்றுலாத்துறை சார்பில் தகவல் மையம் ஒன்று திறக்கப்பட வேண்டும்.
  2. இதற்கான தனி செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டு வாட்ஸ்அப் மூலம் கூட தகவல்களை அனுப்ப செய்யலாம்.
  3. சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் குற்றாலத்தில் இரண்டு விடுதிகள் ஒரு உணவகம் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. இது குறித்து பேருந்து நிலையம் மற்றும் அருவிக்கரைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இதுகுறித்து விளம்பரப்படுத்த வேண்டும்.

குற்றாலத்தில் சுற்றுலாத்துறை மூலம் கடந்த ஆட்சியில் 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப் பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மெயின் அருவி கரையில் பாதுகாப்பு வளைவு அகற்றப்பட்டு புதிய பாதுகாப்பு விளைவு அமைக்கப்பட்டது தவிர குறிப்பிடும்படியான இந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த திட்டத்தில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சேர்ந்து பெரிய அளவில் முறைகேடு செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

  1. அருவிக்கரை அசுத்தமாக காட்சியளிக்கிறது கழிப்பறைகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர் ஆற்றில் கலக்கிறது. இதை தடுக்க வேண்டும்.
  2. குற்றால மெயின் அருவியில் வெள்ள அபாயத்தை எச்சரிக்கும் விதமாக மிகப் பழமை வாய்ந்த பாதுகாப்பு வளைவு ஒன்று இருந்தது.
  3. முந்தைய திமுக அரசு குளிப்பதற்கு அதிக இட வசதி வேண்டுமென்ற காரணத்தை காட்டி அந்த பாதுகாப்பு வளைவை இடித்து விட்டு புதிதாக ஒரு வளைவு கட்டியிருக்கிறார்கள்.
  4. இதன் மூலம் வெள்ள அபாய அளவை கணிப்பது சிரமமாக இருக்கிறது. மீறி உள்ளே செல்பவர்கள் உயிரிழக்கும் அபாபயமும் இருக்கிறது. சீசன் துவங்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்
  5. இதை தடுக்கும் வகையில் முன்பு பாதுகாப்பு வளைவு இருந்த இடத்தில் ஒரு கம்பி வேலி அமைத்து அதனை அளவீடாக கொண்டு அதற்கு மேல் தண்ணீர் விழும் பட்சத்தில் குளிக்க தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  6. அருவிக்குச் செல்லும் வழியில் கடைகள் அதிக அளவில் அனுமதி அளிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதால் மக்கள் இலகுவாக சென்று வர முடியவில்லை.
  7. மெயின் அருவி மற்றும் ஐந்தருவி கரைகளில் வாகனங்கள் அளவுக்கு அதிகமாக அனுமதிக்கப்பட்டு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது
  8. அருவிக்கரைகளில் உள்ள கழிப்பிடங்களில் மிக அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் குறித்த முறையான அறிவிப்பு இல்லை. அடாவடித்தனமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
  9. வெள்ளம் வரும் காலங்களில் அருவிக்கு செல்லும் வழியில் கயிறு கட்டி போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். அந்த இடத்தில் திறந்து மூடும் வகையில் கம்பி வேலி அமைக்க வேண்டும்.
  10. குற்றாலத்தில் தற்போது விற்கப்படும் உணவு பண்டங்கள் குறிப்பாக சிப்ஸ் வடை போன்றவை சுகாதாரமற்ற முறையில் தரமற்ற எண்ணையிலும் தயாரிக்கப்படுகிறது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.
  11. அருகில் நிறைய தண்ணீர் கொட்டினாலும் குற்றாலத்தில் பொதுமக்கள் சுத்தமான தண்ணீர் குடிக்க போதிய வசதி இல்லை . குறிப்பாக பேருந்து நிலையம் அருவி கடைக்கு செல்லும் பஜார் பகுதிகளில் சுத்தமான குடிநீர் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
  12. சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலாத்துறை சார்பில் குற்றாலத்தில் ஐந்து முக்கிய இடங்களில் மலிவு விலையில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
  13. உயர்ந்த தரத்துடனும் நியாயமான விலையிலும் கிடைத்து வந்த இந்த உணவு பொட்டலங்கள் கொண்டுவரப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே விற்று தீர்ந்துவிடும் அளவிற்கு வரவேற்பு பெற்றது. அந்தத் திட்டம் இப்போது செயல்படுத்தப்படவில்லை அதை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
  14. குற்றாலத்தில் இருந்து குறுகிய தூரங்களில் உள்ள ஐந்தருவி பழைய குற்றால அருவி குண்டாறு, மேக்கரை அடவி நயினார் அணை போன்ற இடங்களுக்கு சென்று வரும் வகையில் சிறப்பு பேருந்து ஒன்றை இயக்க வேண்டும்.
  15. சென்னையிலிருந்து திருப்பதிக்கு ஒரு நாள் சுற்றுலா செல்ல வசதி இருப்பது போல சென்னை, திருச்சி, மதுரை கோவை போன்ற பெரு நகரங்களிலிருந்து குற்றாலத்திற்கு (சீசன் காலங்களில் மட்டும்) சுற்றுலாத் துறை பேருந்துகள் மூலம் ஒரு நாள் சுற்றுலா சென்று வர ஏற்பாடு செய்ய வேண்டும்.
  16. ஐந்தருவி, புலியருவி கரையில் பெண்கள் உடை மாற்றும் அறை திறக்க வில்லை
  17. ஒவ்வொரு அருவி கரையிலும் பெண்கள் உடைமாற்றும் அறைகளும் சுத்திகரிக்கப்பட்ட உடை மாற்றும் அறைகளை குடிநீர் வசதியும் செய்து கொடுக்கப்பட வேண்டும் நாளொன்றுக்கு மூன்று முறை சுத்தம் செய்தல் நலம் இவ்வாறு முன்னாள் தென்காசி, அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் கே. ரவி அருணன் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *