உதயநிதி கைதை கண்டித்து கடையத்தில் திமுக மறியல்- கைது.
1 min read
DMK stages a road blockade in Kadayam to condemn Udhayanidhi’s arrest; arrests made
4.8.2026
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து கடையத்தில் தடையை மீறி சாலை மறியலில் ஈடுப்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூரில் நடந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார்.
இதனால் கொதிப்படைந்த திமுகவினர் தமிழக அரசையும் முதல்வர் ஜோசப் விஜயையும் எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் இரா. ஆவுடையப்பன் அறிவுறுத்தலில்,
கடையம் வடக்கு ஒன்றிய திமுக தேர்தல் பணி பொறுப்பாளர் இரா. இரவிச்சந்திரன் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலையில் ஒன்றியக் குழு உறுப்பினர் சங்கர், கிளைச் செயலாளர்கள் சூசை, செல்வராஜ், திருப்பாற்கடல், மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் சதாம் உசேன், இசைந்திரன், மாவட்ட பிரதிநிதி துரைப்பாண்டி, வார்டு உறுப்பினர் முத்துராஜன், வழக்கறிஞரணி நிர்வாகி காமாட்சி தேவ் உள்ளிட்ட திமுகவினர் கடையத்தில் காவல்துறையின் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டனர்.