ஆலங்குளத்தில் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
1 min read
TVK holds a protest demonstration in Alangulam.
4.8.2026
ஆலங்குளத்தில் தென்காசி தெற்கு மாவட்ட தவெகவினர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூரில் நடந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் டி.பி.வி.வி. விபின் சக்கரவர்த்தி தலைமையில் தவெகவினர் ஆலங்குளம் பழைய காவல் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட சார்பு அணி, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை, வார்டு நிர்வாகிகள் மற்றும் மகளிரணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.