வாட்ஸ்-அப்பில் புதிய மாற்றம்: பிறந்த தேதி போன்ற விவரங்களைக் கேட்கும் மெட்டா
1 min read
New change on WhatsApp: Meta asks for details like date of birth.
5.8.2026
இந்தியாவின் புதிய தரவுப் பாதுகாப்புச் சட்டங்களுக்கு இணங்குவதற்காக, வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது சில பயனர்களிடம் வயது தொடர்பான ஒப்புதலை கேட்கும் புதிய அம்சத்தைச் சோதனை செய்து வருகிறது. இந்தியாவில் விரைவில் அமலுக்கு வரவிருக்கும் மத்திய டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின்படி, 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் தரவுகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவர்களது பெற்றோரின் சரிபார்க்கப்பட்ட ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பிரதமர் மோடி வீடியோ நீக்கம், வாட்ஸ் அப் கணக்குகள் திடீர் முடக்கத்தை தொடர்ந்து மெட்டா நிறுவனத்தின் சர்வ தேச பொதுக் கொள்கைத் தலைவர் ஜோயல் கப்ளான் மற்றும் அவரது தொழில்நுட்பக் குழுவுக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நேரில் ஆஜராகச் சம்மன் அனுப்பியுள்ளது.