August 5, 2026

Seithi Saral

Tamil News Channel

காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை..; ஏஐ நகரம்; இலவசமாக 5 ஆடுகள்- பட்ஜெட் விவரம்

1 min read

Breakfast scheme extended up to Class 8; AI City; 5 goats provided for free – Budget details

5.8.2026
நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய திட்டங்கள் பின்வருமாறு:

  • அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.560 கோடி ஒதுக்கீடு
  • மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி அமைக்கப்படும்.
  • மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு
  • பெண்களின் திருமண நாளில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கும் அண்ணன் சீர் திட்டத்துக்கு ரூ.812 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • தமிழகத்தில் 12 மாவட்டங்களில் தலா 1 வீதம் 12 முதியோர் இல்லங்கள் அமைக்க ரூ.6.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  • அரசுப் பள்ளிகளில் காமராஜர் காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்; இதற்கு ரூ.710 கோடி ஒதுக்கீடு.
  • அரசுப் பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் 5 லட்சம் மாணவர்களுக்கு ஹெல்மெட், வாட்டர் பாட்டிலுடன் நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு
  • ஆதரவற்ற பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் 100% மானியத்தில் 30 ஆயிரம் பயனாளிகளுக்கு 5 ஆடுகள் வழங்கப்படும். இதற்கு ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு
  • ஏஐ பல்கலை, சர்வதேச திறன் மேம்பாட்டு மையம், செமிகண்டக்டர் சோதனை ஆய்வகம் ஆகியவற்றுடன் கூடிய நாட்டின் முதலாவது பிரத்யேக ஏ.ஐ., நகரம் அறிவகம் என்ற பெயரில் அமைக்கப்படும்; பட்ஜெட்டில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை ஆடை உற்பத்தியை ஊக்குவிக்க, திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் அமைக்கப்படும். ரூ.10 கோடி ஒதுக்கீடு
  • சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்துக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு
  • புதிய மாநில வீட்டுவசதி திட்டமான வெற்றி வீடு திட்டம் அறிமுகம்; ரூ.3500 கோடியில் செயல்படுத்தப்படும்.
  • வெற்றி மடிக்கணினித் திட்டத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
  • அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழி கற்றல் என்ற புதிய தொழிற்பிரிவுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
  • 2031ம் ஆண்டிற்குள் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி அளிக்கப்படும்.
  • 12 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும் 1 லட்சம் வேலையில்லா இளைஞர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி; பட்டதாரிகள் மற்றும் தொழிற்கல்வி தகுதி பெற்றவர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்படும். வெற்றி திறன் பயிற்சித் திட்டத்துக்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு
  • ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்படும்.
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நிலையான வளர்ச்சியை உறுதி செய்யவும் வெற்றி முனைவோர் திட்டத்துக்கு ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு
  • அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.131 கோடி ஒதுக்கீடு
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க மண்ணின் மகள் திட்டத்துக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.
  • மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் நிறுவப்படும்.
  • மூத்த குடிமக்களுக்காக தமிழகம் முழுவதும் 1000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்களுக்கு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *