September 23, 2026

Seithi Saral

Tamil News Channel

விவசாய இலவச மின்சாரத்துக்கு ரூ.7,432 கோடி; வேளாண் பட்ஜெட்டில் ஒதுக்கீடு

1 min read

Rs.7,432 crore allocated for free electricity for agriculture in the agriculture budget.

6/8/2026
விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரத்திற்கு ரூ.7,432 கோடி வேளாண் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக அரசு, வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை தொடர முடிவு செய்துள்ளது. இதற்காக, மாநிலம் முழுதும் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இந்நிலையில், வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இன்று (ஆகஸ்ட் 06) காலை 9:30 மணிக்கு, வேளாண்துறை அமைச்சர் வினோத், முதல் முறையாக தனது வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது: பணநாயகத்தை தோற்கடித்த பாமரனின் ஜனநாயகவ் முதல்வர் விஜய். கோட் சூட் அணிந்த விவசாயி முதல்வர் விஜய். வேளாண் தொழில், உழவர் நலனையும் காக்க தவெக அரசு உறுதி பூண்டுள்ளது.

வேளாண்மை பாதிக்கப்பட்டால் வேறு எந்த துறையும் சரியான பாதையில் பயணிக்க முடியாது. விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் கடந்த கால திட்டங்கள் தொடரும். விவசாயிகளுக்காக புதிய திட்டங்களும் அமல்படுத்தப்படும். டெல்டா பகுதிகளில் 2509 கி.மீ. வாய்க்கால்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டுள்ளன. விவசாயிகள் நலன் கருதி ரூ.134 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுதி திட்டம் அறிவிக்கப்பட்டது. எல் நினோ தாக்கத்தால் 12 மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு என கணிக்கப்பட்டு உள்ளது.

  • பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்திற்கு மாநில அரசின் சார்பில் ரூ.648 கோடி நிதி ஒதுக்கீடு.
  • பயிர் காப்பீடு திட்டத்துக்கு ரூ.648 கோடி நிதி ஒதுக்கீடு
  • ரூ.122.51 கோடி மதிப்பில் தமிழ்நாடு மண்வள இயக்கம் அமைக்கப்படும்.
  • விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு
  • நெல் விதை வழங்க மானியம் வழங்க ரூ.34.72 கோடி நிதி ஒதுக்கீடு
  • மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு
  • ஏஐ அடிப்படையிலான உழவர் செயலி; ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
  • பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கம்; ரூ.203.64 கோடி நிதி ஒதுக்கீடு
  • உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் அமைக்க ரூ.63.81 கோடி ஒதுக்கீடு
  • சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பணவரகு போன்ற பயிர்களின் சாகுபடியை இருமடங்காக அதிகரிக்க தமிழ்நாடு குறுதானிய இயக்கம்; ரூ.7.61 கோடி நிதி ஒதுக்கீடு
  • பருத்தி உற்பத்தியை பெருக்க ரூ.27.21 கோடி நிதி ஒதுக்கீடு
  • விவசாய நிலங்களில் பசுமைக்கு வேளாண் காடுகள் திட்டத்துக்கு ரூ.17.70 கோடி ஒதுக்கீடு
  • அம்பேத்கர் வேளாண் உதவி திட்டத்துக்கு ரூ.56.72 கோடி ஒதுக்கீடு
  • காட்டுப்பன்றி சேதத் தடுப்புத் திட்டத்துக்கு ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு
  • விளைபொருட்களை பாதுக்காக 43,500 தார்ப்பாய்கள் வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
  • 5 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்க ரூ.11 லட்சம் ஒதுக்கீடு
  • 8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் அமைக்க ரூ.27.82 கோடி நிதி ஒதுக்கீடு
  • திரவ உயிர் உர உற்பத்தி மையங்களின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.3.56 கோடி நிதி ஒதுக்கீடு
  • விதை சுத்திகரிப்பு திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ரூ.7.1 கோடி நிதி ஒதுக்கீடு
  • 17.315 ஏக்கருக்கு விதைக்கரும்பு மானியம் வழங்க ரூ.9.36 கோடி ஒதுக்கீடு
  • கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு
  • பனை பாதுகாப்பு இயக்கம் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
  • வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம் திட்டத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு
  • தமிழ்நாடு தளிர்கிரைகள் திட்டத்துக்கு ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு
  • தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை உயரத்த உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகளை ஊக்குவிக்க ரூ.41 கோடி ஒதுக்கீடு
  • நன்னெறி சாகுபடி; நஞ்சற்ற உற்பத்தி, உலகளாவிய ஏற்றுமதிக்கு ரூ.8.43 கோடி ஒதுக்கீடு
  • தென்னை சிறப்பு திட்டத்துக்கு ரூ.41 கோடி நிதி ஒதுக்கீடு
  • தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகத்துக்கு ரூ.5.30 கோடி ஒதுக்கீடு.
  • வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைக்க ரூ.22 கோடி ஒதுக்கீடு
  • நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டத்துக்கு ரூ.785 கோடி நிதி ஒதுக்கீடு
  • 24 ஆயிரம் விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்க ரூ.227.2 கோடி நிதி ஒதுக்கீடு
  • வான்மகள் திட்டத்துக்கு ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு
  • 100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் உருவாக்க ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கீடு
  • ஆயிரம் ஏக்கர் பாசனப் பரப்பை உருவாக்கிட ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு
  • சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்க ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு
  • வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ரூ.8.13 கோடி நிதி ஒதுக்கீடு
  • நன்னீர் கிணறுகள் அமைத்து மிளகாய் மற்றும் கொத்தமல்லி சாகுபடி செய்ய ரூ.49.4 லட்சம் நிதி ஒதுக்கீடு
  • 100 விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் கதிரடிக்கும் களங்கள் அமைக்க ரூ.2.8 கோடி நிதி ஒதுக்கீடு
  • கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களின் களப்பயிற்சிக்காக 6 புதிய பஸ்கள் வாங்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு
  • தஞ்சை மாவட்டம் சாக்கோட்டையில் நம்வாழ்வார் பெயரில் ஒரு புதிய உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்புக் கல்லூரிக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு
  • நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு
  • 2 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 100 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குள் வசதிகள் ஏற்படுத்த ரூ.4.80 கோடி நிதி ஒதுக்கீடு
  • புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு
  • தமிழ்நாடு விவசாயிகளின் வருமான மேம்பாட்டு ஆணையம் அமைக்க ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு
  • திருக்கோவிலூர், முசிறி, காரைக்குடி, தாராபுரம், கும்பகோணத்தில் வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்க ரூ.4.6 கோடி நிதி ஒதுக்கீடு
  • 50 உழவர் சந்தைகளில் மின்னணு விலைப் பலகைகள் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு
  • உழவர் சந்தைகள் புனரமைக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு

இவ்வாறு அமைச்சர் வினோத் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *