August 6, 2026

Seithi Saral

Tamil News Channel

சைவ, வைணவம் குறித்து ஆபாச பேச்சு; பொன்முடிக்கு பிடிவாரண்ட்

1 min read


Obscene remarks regarding Saivism and Vaishnavism; arrest warrant issued for Ponmudi

6.8.2026
சைவம், வைணவம் குறித்து ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியை வரும் 2ம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட் உத்தரவிட்டது.

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசினார். பலரும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து, பொன்முடி நீக்கப்பட்டார். பின், அவரது அமைச்சர் பதவியும் பறிபோனது.
இந்த இழிவு பேச்சு தொடர்பாக, சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் சார்பில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தன் மீதான இந்த தனிநபர் புகார் மனுவை நிராகரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்முடி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பொன்முடிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தற்போது இந்த வழக்கில் சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் இன்று (ஆகஸ்ட் 6) பொன்முடி ஆஜராகாததால் நீதிபதி கைது வாரண்ட் பிறப்பித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *