August 6, 2026

Seithi Saral

Tamil News Channel

இராமநதி, கடனா நதி அணை நீர்மட்டம் உயர்ந்தது

1 min read

Water levels in the Ramanathi and Kadana Nathi dams have risen.

6.8.2026

மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கடையம் பகுதியில் அமைந்துள்ள இராமநதி மற்றும் கடனாநதி ஆகிய அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. 

3-8-26 காலை நிலவரப்படி 84 அடி கொள்ளளவு கொண்ட இராமநதி அணையின் நீரிருப்பு 66.50 அடியாகவும் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 112 கன அடியாகவும் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 35 கன அடியாகவும் உள்ளது.

85 அடி கொள்ளளவு கொண்ட கடனா நதி அணையின் நீரிருப்பு 67.50 அடியாகவும் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 194 கன அடியாகவும் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 60 கன அடியாகவும் உள்ளது.

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்யாததால் கார் சாகுபடிக்கு விவசாய பணிகளை தொடங்கிய விவசாயிகள் மழையை எதிர்பார்த்து கவலையில் காத்திருந்தனர். சில விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாய பணிகளை தொடங்காமல் இருந்தனர்.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து ள்ளனர்.

செய்தியாளர்: ஜோசப்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *