ஆயிரப்பேரியில் மண் பரிசோதனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
1 min read
Awareness program on soil testing at Ayirapperi
6.8.2026
தென்காசி வட்டாரம், ஆயிரப்பேரி கிராமத்தில் மண் மாதிரி சேகரிப்பு செயல்விளக்கம் மற்றும் மண் பரிசோதனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பள்ளி, வேளாண்மைத் துறை மாணவர்கள், கிராமப்புற வேளாண் அனுபவத் திட்டம் -இன் கீழ், தென்காசி வட்டாரம், ஆயிரப்பேரி கிராமத்தில் மண் மாதிரி சேகரிப்பு செயல்விளக்கப் பயிற்சியை மேற்கொண்டு, மண் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சி உதவி வேளாண்மை இயக்குநர் திருமலைசாமி தலைமையிலும், பாட ஒருங்கிணைப்பாளர் மற்றும் குழு வழிகாட்டி முனைவர் ம. ஜெயந்தி வழிகாட்டுதலின் படியும் நடைபெற்றது.
இச்செயல்பாட்டின் போது, மண் மாதிரியை அறிவியல் முறையில் எவ்வாறு சேகரிக்க வேண்டும் என்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மண் பரிசோதனையின் அவசியம், மண்ணின் ஊட்டச்சத்து நிலை, அமில-காரத் தன்மை, மண்ணிற்கு ஏற்ற பயிர்களைத் தேர்வு செய்தல், மண்ணின் வளநிலை மற்றும் உர மேலாண்மையை சரியான முறையில் திட்டமிடுவதில் மண் பரிசோதனையின் பங்கு குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இதன் மூலம் மண் பரிசோதனையின் பயன்கள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், அறிவியல் அடிப்படையிலான சாகுபடி முறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அபினா சி. தாஸ், அபிநிஷா ரெ. க , ஹர்ஷினி த , மான்சிகா வெ, மற்றும் மனிஷா அ. ஆகிய வேளாண்மைத் துறை மாணவிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரப்பேரி பகுதி விவசாயிகள் குளத்தூரான், சுப்பையா, சீனிப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
One attachment • Scanned by GmailAdd to Drive