பாஜக.வில் வானதி சீனிவாசனுக்கு பொறுப்பு
1 min read
Vanathi Srinivasan assigned a role in the BJP.
23.9.2026
பா.ஜ.க. தேசிய தலைவரான நிதின் நபின் இன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்ககான பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தமிழகத்துக்கு ராம் மாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளர்களாக நிர்மல் குமார் சுரானா மற்றும் டி.கே.அருணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநில பொறுப்பாளராக அரவிந்த படோரியாவும், இணை பொறுப்பாளராக வானதி சீனிவாசனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரியானா மற்றும் சத்தீஸ்கர் மாநில பொறுப்பாளராக ஸ்மிருதி இரானியும், சத்தீஸ்கர் மாநில இணை பொறுப்பாளராக சித்தார்த் ஷம்புவும் நியமிக்கப்பட்டனர்.
கேரள மாநில பொறுப்பாளராக நாகராஜாவும், இணை பொறுப்பாளராக எம்.வெங்கடேசனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.