September 24, 2026

Seithi Saral

Tamil News Channel

போராட்ட அறிவிப்பால் வரும் ஞாயிறு வங்கிகள் இயங்கும் – மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

1 min read

Banks to remain open this coming Sunday due to announced protests – Union Finance Ministry announcement.

23/9/2026
வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் வரும் செப்.28 முதல் 30 வரை மூன்று நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை நடைப்பெற்ற பேச்சுவார்த்தை கூட்டத்தில் எந்தவிதமான சமரசமும் எட்டப்படாத நிலையில் வங்கி ஊழியர்கள் சங்கம் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

போரட்டத்தின் முக்கிய கோரிக்கையாக வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை, ஒய்வுதியம் புதுப்பித்தல், பழைய ஓய்வுதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் ஆகியவையும் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள சுமார் ஒரு லட்சம் வங்கி ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

போராட்டமானது செப்.28 முதல் 30 வரை நடைபெறுவதால், செப்.27 ஞாயிற்றுக்கிழமையன்று வங்கிகள் இயங்கும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

வங்கி ஊழியர்களின் மூன்று நாள் போராட்ட அறிவிப்பால், பொதுமக்களை டிஜிட்டல் மற்றும் ஏ.டி.எம். சேவைகளை. பயன்படுத்துமாறு வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.

வங்கி ஊழியர்களின் போராட்டம் குறித்து அரசு கூறும்போது, வங்கி ஊழியர்களின் நலனுக்காக அரசாங்கம் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

ஊழியர்களின் ஐந்து நாள் வேலை என்பதும் பரிசீலனையில் உள்ளது. ஆனால் முடிவெடுப்பதற்கு முன்பு அரசாங்கம் பல்வேறு தரப்புகளின் கருத்துகளையும் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் இருக்கிறது.

எனவே, வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்துவிட்டு, பேச்சுவார்த்தையைத் தொடருமாறு பிரதிநிதிகள் UFBU-ஐக் கேட்டுக்கொண்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *