August 7, 2026

Seithi Saral

Tamil News Channel

லாட்டரி மார்ட்டினிடம் மு.க.ஸ்டாலின் வாங்கிய ரூ.900 கோடி; ஆதவ் அர்ஜுனா- உதயநிதி காரசார வாதம்

1 min read

The ₹900 crore M.K. Stalin received from Lottery Martin; heated Aadhav Arjuna and Udhayanidhi.

7/8/2026
தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது. அப்போது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-
மது விலக்கு கொள்கை என்பது எங்களுடைய கொள்கை; போதையில்லா தமிழகம் எங்களுடைய கொள்கை, ஆட்சிக்கு வந்த பின்பும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், இங்கு இருக்கும் எம்,எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் எந்த தொழிலிலும் நாங்கள் ஈடுபட்டது கிடையாது.

திமுகவின் நாடாளுமன்ற எம்.பி ஜெகத்ரட்சகன் சாராய ஆலை நடத்துகிறாரா இல்லையா, சாராய ஆலை நடத்தி கொண்டு டாஸ்மாக் நிறுவனம் மூலம் ஆர்டர் வந்து யார் வாங்கியது; திமுகவே அரசு, திமுகவில் இருக்கும் எம்பிக்கள் சாராய ஆலைகள் நடத்துகிறார்கள்.

திமுகவின் பொருளாளர் சாராய ஆலை நடத்துகிறார். திமுகவின் ஐடி அமைச்சர் சாராய ஆலை நடத்துகிறார். இதுக்கு மேல் என்ன ஆதாயம் வேண்டும்,
இவ்வாறு அவர் பேசினார்.

இதனால் கோபம் அடைந்த திமுக எம்.எல்.ஏக்கள் லாட்டரி குறித்து பேசினார். இதையடுத்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, லாட்டரி என கூறுகிறார்கள்; லாட்டரி நிறுவனத்திடம் ஸ்டாலின் ரூ.900 கோடி வாங்கியது ஏன், தைரியம் இருந்தால் பதில் சொல்லுங்கள், அப்பொழுது சொல்லுங்கள். நான் எந்த தொழிலும் இல்லை. எந்த நிறுவனமும் நடத்தவில்லை’ என்றார்.
இதற்கு பதிலளித்து உதயநிதி கூறும் போது, திமுக ஏன் லாட்டரி நிறுவனத்திடம் இருந்து பணம் வாங்கினார்கள் என்று கேட்கிறார். அதனை கொடுத்தது அவருடைய மாமனார் தான். ஏன் கொடுத்தீர்கள் என்பதை உங்கள் மாமனாரிடம் கேட்டு விளக்கத்தை பெற்றுக்கொள்ளலாம்” என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அவர் அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும். அது அவர் அப்பாவிடம் தான் கேட்க வேண்டும். எனக்கு அது எதுவும் தெரியாது. அப்பாவை இங்கே காணும். வீட்டிற்கு போய் உங்கள் அப்பாவிடம் கேளுங்கள். உங்கள் அப்பா கரெக்டா சொல்லுவார். ஏன் வாங்கினார் என்று உங்கள் அப்பா சொல்லுவார்” என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *