August 13, 2026

Seithi Saral

Tamil News Channel

ஐந்தருவி, பழையகுற்றாலம் பகுதியில் மெகா தூய்மைப் பணி

1 min read

Mega cleanliness drive in the Five Falls and Old Courtallam areas.

13/8/2026
உலக யானைகள் தினத்தை முன்னிட்டு ஐந்தருவி, பழையகுற்றாலம், கண்ணுப்புளிமெட்டு பகுதிகளில் மெகா தூய்மைப் பணி நடைபெற்றது

ஐந்தருவி, பழையகுற்றாலம் பகுதியில் மெகா தூய்மைப் ணிஐந்தருவி பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் பணியைத் தொடங்கி வைத்த சாா் ஆட்சியா் வைஷ்ணவிபால்.
உலக யானைகள் தினத்தை முன்னிட்டு ஐந்தருவி, பழையகுற்றாலம், கண்ணுப்புளிமெட்டு பகுதிகளில் மெகா தூய்மைப் பணி புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் வன உயிரினங்களை பாதுகாக்கும் பொருட்டு, ஐந்தருவியில் நடைபெற்ற தொடக்க விழா விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு, சாா்ஆட்சியா் வைஷ்ணவிபால் தலைமை வகித்து மெகா தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து பழைய குற்றாலம், கண்ணுபுளி மெட்டு பகுதிகளிலும் தூய்மைப் பணி நடைபெற்றது. தென்காசி மாவட்ட உதவி வனப்பாதுகாப்பு அலுவலா் நெல்லைநாயகம் , தன்னாா்வலா் பாண்டியராஜ், உயிரியலாளா் கந்தசாமி, தொழில்நுட்ப உதவியாளா் மாரி செல்வம், தென்காசி வனச்சரகா் யாசின், குற்றாலம் வனச்சரக அலுவலா் கருணாமூா்த்தி, பசுமை தோழா் பெரோலின், சூழல் ஒருங்கிணைப்பாளா் ஜெயபாலன் ,வனவா்கள் பாரதி சங்கா் ராஜா, ரமேஷ், குற்றாலம் ஸ்ரீபராசக்தி கல்லூரி மாணவிகள், இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி, ஐசி ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *