தென்காசி மாவட்டதில் 20-ந் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு
1 min read
Order issued to close liquor shops in Tenkasi district on the 20th.
13.8.2026
தென்காசி மாவட்டம் முழுவதும் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 20.08.2025 (வியாழக்கிழமை) அன்று ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி மற்றும் கடையநல்லூர் வட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள குறிப்பிட்ட சில அரசு மதுபானக்கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் மனமகிழ் மன்றம், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் (FL1, FL2, FL3, FL3A, & FL11) ஆகியவை மேற்கண்ட தினத்தில் மட்டும் மூடப்பட்டிருக்கும் எனவும், அன்றைய தினம் மதுபானம் விற்பனை ஏதும் நடைபெறாது எனவும் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.