மத்திய மந்திரி ஜே.பி.நட்டா மருத்துவமனையில் அனுமதி
1 min read
Union Minister J.P. Nadda admitted to hospital
14.8.2026
மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டாவுக்கு இன்றுமுன்தினம் லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உடல்நல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக ஜே.பி.நட்டாவுக்கு கரோனரி ஆஞ்சியோகிராபி எனப்படும் இதய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜே.பி.நட்டா தற்போது நலமுடன் உள்ளார் எனவும், எய்ம்ஸ் இருதயவியல் துறை டாக்டர்கள் அவரது உடல்நலத்தை கண்காணித்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.