தெற்கு கடையத்தில் கிராம சபை கூட்டம்
1 min read
Gram Sabha meeting in South Kadayam
15.8.2026
தென்காசி மாவட்டம் தெற்கு கடையம் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
நாட்டின் 80வது சுதந்திர தின விழாவான நேற்று தெற்கு கடையம் ஊராட்சி மன்ற தலைவி முத்துலெட்சுமி தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு) மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் (கிராம ஊராட்சி), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாரியப்பன் (தணிக்கை) ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடினர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் (கி. ஊ) பொதுமக்களிடம் கிராம சபை கூட்டத்தின் நோக்கம் குறித்தும் குடிநீர் தேக்கி வைக்கப்படும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் சின்டெக்ஸ் டேங்குகள் சுத்தம் செய்யப்பட வேண்டியதின் முக்கியத்துவம் குறித்தும், குடிநீர் சுத்திகரிக்கப்படும் விதம் குறித்தும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்தும்போது மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும், குப்பைகள் தரம் பிரிக்கப்பட வேண்டியதன் நோக்கம் குறித்தும், குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் குப்பை சேகரிக்கும் வண்டிகளில் போடப்படும் குப்பைகளால் தூய்மை பணியாளர்களுக்கு நேரும் கஷ்டங்கள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளித்தனர்.
ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலிங்கம், செயலர் பழனியப்பன், விவேக், கருப்பசாமி, கோபால் ராஜா, இசக்கி ரத்தினம், ஸ்ரீராம் வினோத் ராஜா உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர் மா. ஜோசப்…