August 18, 2026

Seithi Saral

Tamil News Channel

10 வழக்குகளில் 22 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி

1 min read

Judge who sentenced 22 people to death in 10 cases over the past four months.

18.8.2026
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் விரைவு நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகர் கடந்த நான்கு மாதங்களில் 10 வெவ்வேறு வழக்குகளில் 22 குற்றவாளிகளுக்கு ரவி குமார் திவாகர் மரண தண்டனை விதித்துள்ளார்.

ஆகஸ்ட் 13 அன்று, 12 ஆண்டுகளுக்கு முன்பு ஷாம்லி மாவட்டத்தில் நடந்த பவன் குமார் என்பவரது கொலை வழக்கில் ராம்வீர், ராஜீவ், ராகுல், ஹரேந்தர் குமார் ஆகிய 4 குற்றவாளிகளுக்கு அபராதத்துடன் மரண தண்டனை விதித்தார். 1999ஆம் ஆண்டு 5 லட்சம் ரூபாய் பிணை கேட்டு தொழிலதிபர் சலீம் என்பவரை கடத்திக் கழுத்தை அறுத்துக் கொன்ற வழக்கில், முதன்மை குற்றவாளியான ஷாநவாஸு என்பவருக்கு அண்மையில் மரண தண்டனை வழங்கினார்.

2011இல் நடந்த விவசாயி கொலை வழக்கு, 2010 பஞ்சாயத்து தேர்தல் முன்விரோதக் கொலை வழக்கு, பணியில் இருந்த ஹோம் கார்டு குத்திக் கொல்லப்பட்ட வழக்கு மற்றும் பல இரட்டைக்கலை வழக்குகள் அனைத்திலும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்துள்ளார்.

குற்றங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை என ஒரு தரப்பினர் இத்தீர்ப்புகளை ஆதரித்தாலும், குறுகிய காலத்தில் இத்தனை பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது குறித்து மனித உரிமை ஆர்வலர்களும் சட்ட வல்லுநர்களும் கவலைகளைத் தெரிவித்து வருகின்றனர்.

லக்னோவைச் சேர்ந்த 46 வயதான நீதிபதி ரவி குமார் திவாகர் முதன்முதலில், 2009ஆம் ஆண்டு அசாம்கரில் கூடுதல் சிவில் நீதிபதியாக பொறுப்பேற்றார். தொடர்ந்து சுல்தான்பூர் உட்படப் பல இடங்களில் பணியாற்றிய இவர், 2025 நவம்பர் முதல் முசாபர்நகரில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

முன்னதாக, 2022இல் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோகிராபி ஆய்வு நடத்த உத்தரவிட்டதன் மூலமும் இவர் நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *