August 22, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆசிரியை கன்னத்தில் அறைந்ததில் மாணவி சுருண்டு விழுந்து சாவு

1 min read

Student collapses and dies after being slapped on the cheek by a teacher.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் கதரொட் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6 வயதான பிரனய் தேஜ் என்ற மாணவன் எல்கேஜி படித்து வந்தான்.

இதனிடையே, மாணவன் பிரனய் தேஜ் வியாழன் அன்று பள்ளிக்கு வீட்டுப்பாடம் எழுதாமல் வந்ததாக கூறி ஆசிரியை கன்னத்தில் அறைந்துள்ளார். இதில், வகுப்பறையில் சிறுவன் பிரனய் தேஜ் மயங்கி விழுந்தார். இதையடுத்து சிறுவனை மீட்ட பள்ளி நிர்வாகத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், பிரனய் தேஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *