பரந்தூர் விவசாயிகளுக்கு நிலத்தை திருப்பி கொடுக்க ஆலோசனை- அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
1 min read
Proposal to return land to Parandur farmers – Minister Rajmohan shares information.
26.8.2026
தமிழ் தென்றல் திரு.வி.கலியாண சுந்தரனார் 143 -வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் திரு.வி.க படத்திற்கு பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முதல்முறையாக இன்றைய தினத்தில் தமிழ்நாடு அரசு விழாக்களில் நாட்டுப்புற கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மயிலாட்டம், கரகாட்டம் மற்றும் இசைக்கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
உலகத் தமிழ் மாநாடு நடத்தவது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுத்துள்ளார். அதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. பரந்தூர் விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பிடுங்குவது தாயையும், குழந்தையும் பிரிப்பதற்கு சமம்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு மீண்டும் அந்த நிலத்தை வழங்குவது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு விவசாயமும் வேண்டும். விமான நிலையமும் வேண்டும். இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களிடமும் இதுகுறித்து பேச வேண்டிய உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.